sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'எங்களுடன் இணைந்து குரல் கொடுங்கள்': அ.தி.மு.க., பழனிசாமிக்கு முதல்வர் அழைப்பு

/

'எங்களுடன் இணைந்து குரல் கொடுங்கள்': அ.தி.மு.க., பழனிசாமிக்கு முதல்வர் அழைப்பு

'எங்களுடன் இணைந்து குரல் கொடுங்கள்': அ.தி.மு.க., பழனிசாமிக்கு முதல்வர் அழைப்பு

'எங்களுடன் இணைந்து குரல் கொடுங்கள்': அ.தி.மு.க., பழனிசாமிக்கு முதல்வர் அழைப்பு

1


UPDATED : பிப் 16, 2024 02:53 PM

ADDED : பிப் 15, 2024 08:19 PM

Google News

UPDATED : பிப் 16, 2024 02:53 PM ADDED : பிப் 15, 2024 08:19 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''மத்திய அரசிடமிருந்து நிதி பெற, எதிர்க்கட்சி தலைவர் எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சட்டசபையில், அவர் பேசியதாவது:

மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும், மத்திய அரசின் தவறான கொள்கைகளை, நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை. மாநில முதல்வர்களே, டில்லி வந்து போராட்டம் நடத்தும் அவலத்தை பார்க்கிறோம்.

இரண்டு பெரிய இயற்கை பேரிடர்களை சந்தித்தோம். அதற்குக் கூட நிவாரணத் தொகை தரவில்லை. கடந்த, 2022 ஜூன் 30 முதல், ஜி.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகையை நிறுத்தி விட்டனர். இதனால், தமிழகத்துக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, புதிய சிறப்பு திட்டங்களை தருவதில்லை. தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட, ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக, ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். மெட்ரோ ரயில் வேண்டாம் எனக்கூறி, மோனோ ரயிலுக்கு கொடி பிடித்தவர்கள், இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி.

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், அதை செயல்படுத்த, ஆட்சியில் இருந்தவரை முனைப்பு காட்டவில்லை.

எங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்தான், பணி ஆணைகள் வழங்கப்பட்டன. பிரதமரை சந்திக்கும் போதெல்லாம், மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்கிறேன்.

மத்திய அரசு இதுவரை நிதி தராததால், முழுத் தொகையையும், மாநில அரசு நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனிலிருந்து மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுநாள் வரை பா.ஜ., கூட்டணியில் இருந்த போது, பேசாமல் இருந்த எதிர்க்கட்சி தலைவர், இப்போதாவது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது.

இப்போதும் ஒன்றும் குறைந்து விடவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எங்களுடன் இணைந்து, மத்திய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் அவர்கள் தொகுதியில், நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத, 10 கோரிக்கைகளை, மாவட்ட கலெக்டர்களிடம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

அவர்கள் கொடுத்த பணிகளில், 797 பணிகளை, 11,132 கோடி ரூபாயில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதில், 582 பணிகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டன. அவற்றில், 63 பணிகள் நடந்து வருகின்றன.

எதிர்க்கட்சி தலைவர் அளித்த கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகள், நடப்பாண்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன. மூன்றுக்கு உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு, ஒரு பணி முடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.






      Dinamalar
      Follow us