ADDED : மே 10, 2025 01:39 AM

கடலுார்: மாமல்லபுரத்தில் நாளை நடக்க உள்ள சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா, பா.ம.க.,தலைவர் அன்புமணி தலைமையில் நாளை நடக்கிறது. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக மாற வன்னியர் உள்ளிட்ட அனைத்து பின்தங்கிய சமுதாயங்களும் முன்னேற வேண்டும். வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அதேப் போல மற்ற சமூகங்களுக்கும் மக்கள் தொகைக்கு இணையாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது.
மாநாட்டில் கடலுார் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.