ADDED : டிச 10, 2024 07:38 PM

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -7
சரியா... தவறா...@@
தன் தோட்டத்தில் வேலை செய்ய நாள் ஒன்றுக்கு, ஒரு வெள்ளி நாணயம் கூலியாக
தருவதாக சிலரிடம் கூறினார் பண்ணையார். பலரும் வேலைக்கு வந்தனர். ஆனாலும் இன்னும் ஆட்கள் தேவைப்படவே மீண்டும் தேட ஆரம்பித்தார். ஆனால் மாலையில்தான் ஆட்கள் கிடைத்தனர். அவர்களிடம் 'நேர்மையான கூலியை தருவேன்' என்று மட்டும் சொன்னார்.
அவர்களும் வேலைபார்க்க ஆரம்பித்தனர்.ஒரு மணிநேரத்தில் பொழுது சாய்ந்தது.மாலையில் வேலைக்கு வந்தவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயம் தந்தார். இதைப் பார்த்ததும்
காலை முதல் வேலை பார்த்தவர்களுக்கு நமக்கு இன்னும் அதிகமாக கிடைக்கும் என
நினைத்து மகிழ்ந்தனர். ஆனால் அவர்களுக்கும் அதே ஒரு வெள்ளி நாணயமே தரப்பட்டதால்,
''இது அநியாயம்'' என்றனர்.
அதற்கு பண்ணையார், ''நான் பேசிய கூலியை கொடுத்துவிட்டேன். கடைசியில்
வந்தவர்களுக்கு என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா என்ன'' எனக்கேட்டார். இங்கு நாம் ஒன்றை அறிய வேண்டும். பண்ணையார் செய்தது சரியா? தவறா? என யோசிக்காதீர்கள். தினமும் இவ்வளவு கிடைத்தால்தான் ஒரு குடும்பம் பிழைக்க முடியும் என கணக்கு உள்ளது. அதைத்தான் அந்த பண்ணையாரும் செய்தார்.

