'100 நாளுக்கு பின் தான் இனி ஓ.டி.டி.,யில் சினிமா'
'100 நாளுக்கு பின் தான் இனி ஓ.டி.டி.,யில் சினிமா'
ADDED : டிச 14, 2025 12:46 AM

: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது:
தமிழகத்தில், 1,168 சினிமா தியேட்டர்கள் உள்ளன. அதில், 60 சதவீத தியேட்டர் கள் நஷ்டத்தை எதிர்கொண்டிருக்கின்றன.
புதிதாக திரைக்கு வரும் சினிமாக்கள், தியேட்டர்களில் திரையிடப்பட்டு, நான்கு வாரங்களில் ஓ.டி.டி.,யில் வெளியிடப்படுவதால், தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
குறிப்பாக, 'சிங்கிள்' தியேட்டர்களின் வருவாய், 10 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துவிட்டது.
எனவே, புதிதாக திரைக்கு வரும் சினிமாக்கள், தியேட்டர்களில் திரையிடப்பட்டு, 100 நாட்கள் கழித்த பிறகு தான் ஓ.டி.டி.,யில் திரையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
அடுத்த மாதம் முதல், இந்த நிபந்தனைக்கு உட்படாத சினிமாக்களை தியேட்டர்களில் திரையிடுவதில்லை என, தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

