ADDED : அக் 14, 2025 06:26 AM

சென்னை : திண்டிவனம் மற்றும் தேனியில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காக்களை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
l தொழில் துறை வாயிலாக தேர்வாய் கண்டிகை, வல்லம் வடகால், சிறுசேரி, கும்மிடிப்பூண்டி, கடலுார், பர்கூர், பெருந்துறை, துாத்துக்குடி, நிலக்கோட்டை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, ஒரகடம் , பிள்ளைபாக்கம், ஓசூர், கங்கைகொண்டான் ஆகிய, 16 சிப்காட் தொழில் பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன
l விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், கொள்ளார் மற்றும் பெலாகுப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி, 157 ஏக்கர் பரப்பளவில், 120 கோடி ரூபாய் செலவில், திண்டிவனம் மெகா உணவு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது
l தேனி மாவட்டம், உப்பார்பட்டி, தப்புகுண்டு, பூமலைகுண்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கி, 123 ஏக்கர் பரப்பளவில், 70 கோடி ரூபாய் செலவில், தேனி மெகா உணவு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது
l சமூக நலத்துறை வாயிலாக, சென்னை செனாய் நகர் மற்றும் மதுரை அண்ணாநகரில், 43.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 'அரண்' என்ற பெயரில், திருநங்கையருக்கான இல்லங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.