தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அவசரகால நடவடிக்கை கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

அவசரகால நடவடிக்கை கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

அவசரகால நடவடிக்கை கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

1


UPDATED : அக் 22, 2026 08:56 PM

ADDED : அக் 22, 2026 08:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 08:56 PM ADDED : அக் 22, 2026 08:54 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ‘பருவ மழை நேரத்தில், அவசரகால சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய நேரத்தில் திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். வானிலை மையத்தால் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நீலகிரி, திண்டுக்கல், கோவை, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட, 18 மாவட்ட கலெக்டர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கலெக்டர்களிடம் முதல்வர் விஜய் கூறியதாவது:

கனமழை மற்றும் வெள்ளபெருக்கின் போது, உயிரிழப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளுக்கு இடையே, ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். அவசரகால சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய நேரத்தில் திறம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

அப்போது, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலர் சாய்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் சந்தரமோகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் பழனிசாமி. கமிஷனர் சிவஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us