ADDED : ஆக 30, 2025 01:30 AM
கோவை; இமானுவேல் சேகரனார், 68வது நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு, புதிய தமிழகம் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை:
கடந்த, 32 ஆண்டுகளாக செப். 11 அன்று இமானுவேல் சேகரனார் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அரசு விழா எடுக்காத நிலையிலும், அனைத்து அரசியல் கட்சியினர், மக்கள் திரளாக பங்கேற்கும் நிகழ்ச்சியாக மாற்றினோம்.
சிலர் இமானுவேல் சேகரனார் பெயரைக்கூறி, அடாவடி நிதி வசூலில் ஈடுபடுகின்றனர். அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சியை களங்கப்படுத்துவோரிடம் இருந்து பாதுகாக்க, கட்சி சார்பில் ஒருங்கிணைந்து நடத்த உள்ளோம்.
ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலுச்சாமி தலைமையில், மாவட்ட, மாநில பொறுப்பாளர்களை உள்ளடக்கி, 150 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
செப். 10 மாலை 6 முதல் மறுநாள் இரவு 10 மணி வரை அனைவரையும் வரவேற்று, மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி, நிகழ்ச்சியை சிறப்பாக ஒழுங்குபடுத்தும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.