சிறுபான்மையினர் நல திட்டங்கள் ஆய்வு செய்ய குழு அமைப்பு
சிறுபான்மையினர் நல திட்டங்கள் ஆய்வு செய்ய குழு அமைப்பு
ADDED : செப் 20, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சிறுபான்மையினர் நலத்திட்டங்கள், அனைத்து மாவட்டங் களிலும், தகுதி வாய்ந்த மக்களுக்கு சென்ற டை வதை உறுதி செய்வதற்கு, மாவட்ட அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கு, சிறுபான்மை நல ஆணையர் பரிந்துரையின்படி, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர் சுபேர்கான், மாவட்ட வருவாய் அலுவலர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலர் சரவணவேல்ராஜ் பிறப்பித்துள்ளார்.

