ADDED : செப் 30, 2025 08:06 AM

சென்னை :'த.வெ.க., தலைவர் விஜயை கைது செய்ய வேண்டும்' என, ஒரு தரப்பினரும், 'அவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டி சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்வோரை கைது செய்ய வேண்டும்' என, விஜய் கட்சியினரும், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
த.வெ.க.,வைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஆதித்ய சோழன். டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள புகாரில், 'எங்கள் கட்சி தலைவருக்கு எதிராக செயல்பட்டு, தமிழ்நாடு மாணவர் சங்கம் என்ற அமைப்பினர், போஸ்டர் ஒட்டி, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
அதேபோல, 'உங்களில் ஒருவன்' என்ற அமைப்பின ரும், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், 'தெலுங்கானா மாநிலத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியான விஷயத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது போல, கரூர் சம்பவத்துக்காக விஜயை கைது செய்ய வேண்டும்' என, கூறியுள்ளனர்.