கம்யூ.,க்கள் விலை போய் விட்டனர் 'மாஜி' அமைச்சர் கடம்பூர் ராஜு சுளீர்
கம்யூ.,க்கள் விலை போய் விட்டனர் 'மாஜி' அமைச்சர் கடம்பூர் ராஜு சுளீர்
ADDED : நவ 15, 2024 08:48 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று அளித்த பேட்டி:
தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. மக்கள் அவதிப்படுகின்றனர். இருள் விலக வேண்டும். விடியாத ஆட்சி விலக வேண்டும் என்று மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். மக்கள் ஒன்றை நினைக்க, முதல்வர் அதை மாற்றி சொல்லி வருகிறார்.
அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த கம்யூ., இயக்கங்கள், இப்போது பொட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கின்றன. ஆளும்கட்சியோடு கூட்டணி வைத்திருப்பதால், அவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க மறுக்கின்றனர். மொத்தத்தில் அவர்கள் விலை போய்விட்டனர். தமிழகத்தில் நடக்கும் கொடுமைகளை இனியாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிக்கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் காவல் துறையினர், டாக்டர்கள் உட்பட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை. இதையும் கம்யூ., இயக்கங்கள் பார்த்துக்கொண்டு அமைதியாகத்தான் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

