ADDED : நவ 20, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், நவவெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட நாச்சிப்பட்டி பஞ்., பகுதியில் ரேஷன் கடை அருகே, அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், விளையாடுவதற்கும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பஞ்., நிர்வாகம் சார்பில், 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரித்து வருகின்றனர்.
இதனால் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். நடைபயிற்சி மேற்கொள்வோரும் போதிய இடவசதியின்றி, காலை நேரத்தில் சாலையில் பாது
காப்பற்ற நிலையில் செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, நாச்சிப்பட்டி பஞ்., பகுதியில் விளையாட்டு மைதா
னம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

