தஞ்சை தமிழ் பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர்., பெயரை நீக்கியதற்கு கண்டனம்
தஞ்சை தமிழ் பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர்., பெயரை நீக்கியதற்கு கண்டனம்
ADDED : ஜன 03, 2026 02:15 AM

சென்னை: தஞ்சை தமிழ் பல்கலை இணையதளத்தில், எம்.ஜி.ஆர்., பெயர், படம் நீக்கப்பட்டதற்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை
எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலையை 1981ல் நிறுவினார்.
பல்கலையின் இணையதளத்தில், 1981ல் அண்ணாதுரை பிறந்த நாளில் இப்பல்கலை தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளது. அதை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்., பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
அந்த இணையதளத்தின் போட்டோ கேலரியில் இருந்த எம்.ஜி.ஆர்., படமும் நீக்கப்பட்டுள்ளது.
தமிழை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தி வந்த கருணாநிதியின் பெயரை, வெட்கம் இல்லாமல் கழிப்பறை முதல் காவாங்கரை வரை வைக்கும் அவரது மகன் ஸ்டாலின், எம்.ஜி.ஆர்., பெயரை அவர் துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலையில் இருந்து நீக்கியிருப்பது, அவரது மமதையின் உச்சத்தை காட்டுகிறது.
இதுபோன்ற வன்மத்தை கைவிட்டு, தஞ்சை தமிழ் பல்கலை இணையதளத்தில் எம்.ஜி.ஆர்., படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

