உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல்
உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல்
ADDED : மார் 18, 2024 08:11 PM
மயிலாடுதுறை::சீர்காழி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி ராஜராஜன் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை குழுவினர் நடத்திய சோதனையில் சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவர் காரில் உரிய ஆவணம் இன்றி ரூ1 லட்சத்து 12 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

