கூட்டணியை காங்., மேலிடம் முடிவு செய்யும்: டி.எஸ்.தியோசிங்
கூட்டணியை காங்., மேலிடம் முடிவு செய்யும்: டி.எஸ்.தியோசிங்
ADDED : ஜன 20, 2026 09:13 AM

சென்னை: ''தமிழக சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடை, டில்லி மேலிடம் முடிவு செய்யும்'' என, தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆய்வுக்குழு தலைவர் டி.எஸ்.தியோசிங் தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், நேற்று தமிழக சட்டசபை தேர்தல் வேட்பாளர் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அக்குழுவின் தலைவரும், சத்தீஸ்கர் மாநிலத்தின் துணை முதல்வருமான தியோசிங் அளித்த பேட்டி:
தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சார்பி ல் போட்டியிட விருப்ப மனு அளிப்பதற்கு, நாளை கடைசி நாள். தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட, இதுவரை 6,000 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படும். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து, டில்லி மேலிடம் தான் முடிவு செய்யும்.
தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மட்டுமே எங்களுடையது. குற்றப் பின்னணி உள்ளவர்கள் விண்ணப்பித்துள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்வோம். தேர்தலில், 'இண்டி' கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

