தெற்கு ரயில்வே பொது மேலாளர் எம்.பி.,க்களுடன் ஆலோசனை
தெற்கு ரயில்வே பொது மேலாளர் எம்.பி.,க்களுடன் ஆலோசனை
ADDED : பிப் 20, 2024 01:35 AM

சென்னை:சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, தமிழக எம்.பி.,க்களுடன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை நடத்தினார்.
தெற்கு ரயில்வே தலைமையகத்தில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார். இதில், தி.மு.க., -- எம்.பி.,க்கள் தயாநிதி, கதிர் ஆனந்த், கலாநிதி, செல்வம், கிரிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ரயில்வே திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, கூடுதல் ரயில்கள் இயக்குவது, கூடுதல் நிறுத்தம் வழங்குவது, பெண் பயணியர் பாதுகாப்பை மேம்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, தமிழக எம்.பி.,க்கள் முன்வைத்து பேசினர்.
எம்.பி.,க்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து, படிப்படியாக நடவடிக்கை எடுப்பதாக, தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த கூட்டத்தில், சென்னை ரயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

