'ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றணும்: அண்ணாமலை
'ஒப்பந்த பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றணும்: அண்ணாமலை
ADDED : ஜூலை 16, 2025 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தமிழகம் முழுதும் மாநகரம், நகராட்சி, பேரூராட்சி என, மக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த பணியாளர்கள்.
கடந்த, 20 ஆண்டுகளாக அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளாக குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு, ஒப்பந்தப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை.
ஒரே ஒரு நாள் குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தால், அதனால் பாதிக்கப்பட போவது, ஒட்டுமொத்த தமிழக மக்களே. குடிநீர் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, தி.மு.க., அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.