உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 12, 2026 07:10 PM
அ நிறம் | அளவு
சென்னை: கூட்டுறவு வீட்டுவசதி துறைக்கு என உருவாக்கப்பட்ட இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் இன்று (நவ.,12) தொடங்கி வைத்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், கூட்டுறவு வீட்டுவசதி துறைக்கு என, www.rcshousing.com என்ற இணையதளம் மற்றும் செயலி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்தல், கடன் சேவைகள், திருமண மண்டப முன்பதிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இணையவழியில் பெற முடியும்.
