இரு சேமிப்பு கிடங்குகள் கட்ட கூட்டுறவு துறை திட்டம்
இரு சேமிப்பு கிடங்குகள் கட்ட கூட்டுறவு துறை திட்டம்
ADDED : செப் 06, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:திருவண்ணாமலை மற்றும் மதுரையில் தலா, 1,000 டன் கொள்ளளவில், இரு சேமிப்பு கிடங்குக ளை கூட்டுறவு துறை கட்ட உள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பயிர் கடன் வழங்குவதுடன், ரேஷன் கடைகளையும் நடத்துகின்றன. அவை, லாப நோக்குடன் செயல்பட பல தொழில் செய்யும் சங்கங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், 'நபார்டு' வங்கியில், மிகக் குறைந்த வட்டியில் கடன் பெற்று, டிராக்டர், உழவு இயந்திரங்களை, கூட்டுறவு சங்கங்கள் வாங்கி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விடுகின்றன.
அத்துடன், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா வெள்ளாகுளம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டில், தலா, 1,000 டன் கொள்ளளவில், சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. திட்டச்செலவு, 3.50 கோடி ரூபாய்.