தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/கள்ள நோட்டு புழக்கம் ஐந்து பேருக்கு ‘காப்பு’

கள்ள நோட்டு புழக்கம் ஐந்து பேருக்கு ‘காப்பு’

கள்ள நோட்டு புழக்கம் ஐந்து பேருக்கு ‘காப்பு’


UPDATED : அக் 31, 2026 06:30 PM

ADDED : அக் 31, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 06:30 PM ADDED : அக் 31, 2026 06:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குடியாத்தம்: குடியாத்தத்தில், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஹோட்டல் உரிமையாளர் ரபிக், 48, உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலுார் மாவட்டம், தரணம்பேட்டையை சேர்ந்தவர் ரபிக். இவர், குடியாத்தத்தில் ஹோட்டல் நடத்துகிறார். சில நாட்களுக்கு முன், ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்ய வந்தவரிடம் இரண்டு, 500 ரூபாய் நோட்டுகளை ரபிக் கொடுத்துள்ளார்.

அவை கள்ள நோட்டுகள் என தெரிந்ததால், குடியாத்தம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில், டெலிவரி நபர் புகார் அளித்தார். இதையடுத்து, ரபிக்கின் ஹோட்டலில், குடியாத்தம் டவுன் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த, 50 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். ரபிக் தகவலில், தங்கம் நகர் ஜிபேர் அஹமத், 52, வீட்டில், 20 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

டி.டி., மோட்டூர் காமராஜ், 46, சங்கராபுரம் கோபால், 46, ஆகியோரிடம் தலா, 25 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆம்பூர் பாபு, 65, என்பவரிடம், 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 1.50 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேற்கு வங்கத்தில் கள்ள நோட்டுகள் வாங்கி வந்து புழக்கத்தில் விட்ட அவர்கள், ஐவரையும் குடியாத்தம் டவுன் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us