தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வெறிச்சோடிய நுாலகம்

வெறிச்சோடிய நுாலகம்

வெறிச்சோடிய நுாலகம்


UPDATED : நவ 07, 2026 06:21 PM

ADDED : நவ 07, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 06:21 PM ADDED : நவ 07, 2026 06:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை காந்திபுரத்தில் உள்ள ஈ.வெ.ரா., நுாலகம் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படுகிறது. இதுவரை தினமும் சொற்ப எண்ணிக்கையிலேயே வாசகர்கள் வந்து சென்றனர். புத்தகம் வாசிக்க வருவோர் பதிவேட்டில் தங்களது பெயர் எழுதி கையெழுத்திட வேண்டும். ஒரு தாளில் பாதியளவுக்கு கூட பெயர்கள் எழுதப்படுவதில்லை. அந்தளவுக்கே புத்தகம் வாசிக்க வந்தனர். புத்தக ஊழலை பெருமாள் முருகன் அம்பலப்படுத்திய பின், அந்த கூட்டமும் குறைந்து போனது.

அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தினர் அப்படி என்ன தான் புத்தகங்கள் வைத்திருக்கின்றனர் என்பதை பார்ப்பதற்காகவே நேற்று சிலர் வந்தனர். ரேக்குகளில் உள்ள அப்புத்தகங்களை பார்த்து, சில புத்தகங்களில் சில பாராக்களை படித்து பார்த்து, மனம் நொந்து, போலி புத்தகம் என்பதை எளிதில் கண்டறிந்தனர். இப்படியும் ஊழல், முறைகேடு செய்ய முடியுமா என, வேதனைப்பட்டும் சென்றனர். புத்தக ஊழல் வெளிச்சத்துக்கு வந்த பின், நுாலகத்துக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் சரிந்து விட்டதாக, ஊழியர்கள் வருத்தப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us