தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆனந்தம் நிறைந்த வாழ்வு அனைவருக்கும் அமையட்டும்

ஆனந்தம் நிறைந்த வாழ்வு அனைவருக்கும் அமையட்டும்

ஆனந்தம் நிறைந்த வாழ்வு அனைவருக்கும் அமையட்டும்


UPDATED : நவ 07, 2026 06:21 PM

ADDED : நவ 07, 2026 06:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 06:21 PM ADDED : நவ 07, 2026 06:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தி:

உலகெங்கும் வாழும் இந்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன். நாளும் உத்சவம் மாதமும் பண்டிகை என்பது பாரதத்தின் தனிச்சிறப்பு.

அதிலும் பண்டிகைகளில் தலையாய பண்டிகை தீபாவளி. எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் வெகு உற்சாகமாகத் தீபாவளி கொண்டாடுகிறோம். தீபாவளி, குடும்பம், ஆன்மிகம், வாழ்வியல் ஒழுங்கு என அனைத்தையும் இணைக்கும் பண்டிகை.

சம்பிரதாயக் கொண்டாட்டம் அல்ல தீபாவளி. நம் முன்னோர்களின் அறிவாற்றலைக் கொண்டாடும் அற்புத நிகழ்வு.

ஞானம் என்ற ஒளியால் மனத்தில் குடிகொண்டுள்ள அஞ்ஞானம் என்ற

இருளை விரட்டியடிப்பது தீபாவளியின் தத்துவம்.

பொய், வஞ்சனை முதலிய எதிர்மறை குணங்களை ஞான ஒளியால் வெளியேற்றி மனதை பிரகாசமாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பண்டிகை. பண்டிகைகள் உலகம் முழுவதும் சமயம் சார்ந்து கொண்டாடப்படுவது தான் வழக்கம்.

பாரதத்தில் தீபாவளி சமயம் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பாரதத்தின் அனைத்து சமயத்தவராலும் கொண்டாடப்படுகிறது. அதனால், இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உண்மையைச் சொல்லும் விழா.

இந்த தீபஒளித் திருநாளில் செழிப்பும் மகிழ்ச்சியும் அனைத்து இல்லங்களிலும் பெருக வேண்டும் என்ற சிந்தனையோடு பண்டிகை கொண்டாடுகிறோம்.

இந்த சிந்தனையின் செயல்பாடாகவே பிரதமர் நரேந்திர மோடி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு நம் நாட்டில் தயாரித்த பொருள்களையே பயன்படுத்துவோம் என்று வழிகாட்டி உள்ளார்.

இதனால் கலைஞர்கள் முதல், சிறுதொழில் செய்வோர் வரை நம் மக்கள் அனைவரின் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும். எல்லாரும் வளமோடும் மகிழ்வோடும் பண்டிகையைக் கொண்டாட வாய்ப்பாக இருக்கும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து சீரும் சிறப்புமாக தீபாவளியைக் கொண்டாடுவோம். தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெருகி செல்வ வளமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வு அனைவருக்கும் அமையட்டும்.

இறைவா, எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை எங்கள் உள்ளத்தை விட்டு அகலாது இருக்க வேண்டும் என்று அருள்புரிவாயாக. எல்லாருக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். வாழ்க வளர்க.

இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us