தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மணியனுக்கு எதிராக குற்ற பத்திரிகை

மணியனுக்கு எதிராக குற்ற பத்திரிகை

மணியனுக்கு எதிராக குற்ற பத்திரிகை


ADDED : அக் 02, 2024 03:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 03:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:-வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஆர்.பி.வி.எஸ்., மணியனுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரில், கடந்தாண்டு செப்டம்பரில் நடந்த நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின், முன்னாள் மாநில துணை தலைவர் ஆர்.பி.வி.எஸ்., மணியன், 76, அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோர் குறித்து, அவதுாறாக கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது.

போலீசில் வி.சி.,யை சேர்ந்த செல்வம் அளித்தார். அந்த புகாரின்படி, இந்திய தண்டனை சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிந்த போலீசார், கடந்தாண்டு செப்.,14ல் மணியனை கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமின் பெற்றார்.

இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், அரசு சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகையில், அரசு தரப்பில், 15 சாட்சிகள், 34 ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டு, வழக்கு எண்ணிடப்பட்டு விசாரணைக்கு வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us