sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இணையவழி குற்றம்: 9 மாதத்தில் 1.22 லட்சம் புகார்

/

இணையவழி குற்றம்: 9 மாதத்தில் 1.22 லட்சம் புகார்

இணையவழி குற்றம்: 9 மாதத்தில் 1.22 லட்சம் புகார்

இணையவழி குற்றம்: 9 மாதத்தில் 1.22 லட்சம் புகார்


UPDATED : அக் 11, 2025 01:46 AM

ADDED : அக் 10, 2025 10:08 PM

Google News

UPDATED : அக் 11, 2025 01:46 AM ADDED : அக் 10, 2025 10:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், இணைய வழி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பாக, கடந்த ஒன்பது மாதங்களில், 1 லட்சத்து, 22,057 புகார்கள் பதிவாகி உள்ளன.

Image 1480521


பல்வேறு மாநிலங்களில் நடக்கும் இணையவழி குற்றம் தொடர்பாக, '1930' என்ற எண்ணிலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களும், இந்த இணையதளத்தில் தான் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டு செப்., வரை, தமிழகத்தில் நடந்த இணையவழி குற்றங்கள் தொடர்பாக, 1 லட்சத்து, 22,057 புகார்கள் பதிவாகி உள்ளன. கடந்த ஆண்டில், 1 லட்சத்து, 27,065 புகார்கள் பதிவாகின.

Image 1480522


மாநில சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

இணையவழி குற்றங்கள் நடந்தால், 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டிய அவசியம் குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

அதன் பயனாக, இந்த ஆண்டில், 1.22 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளன . அடுத்தடுத்த ஆண்டுகளில் புகார்களின் எண்ணிக்கை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புகார்களும், வழக்குப்பதிவும்

ஆண்டு பதிவான புகார்கள்

2023 95,084

2024 1,27,065

2025, செப்., வரை 1,22,057

**

ஆண்டு எப்.ஐ.ஆர்., பதிவு சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கப்பட்டது விசாரணையில்

2023 3,097 64,501 27,486

2024 4,326 80,206 42,533

2025, செப்., வரை 2,003 72,525 47,529

***






      Dinamalar
      Follow us