ADDED : பிப் 08, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'டான்செட்' நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, பிப்., 12 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பல்கலைகளில் இணைப்பு பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான்., ஆகிய படிப்புகளில் சேர, டான்செட், சீட்டா ஆகிய பொது நுழைவு தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு மார்ச்சில் நடக்க உள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் நேற்று முடிய இருந்த நிலையில், வரும், 12ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படுவதாக, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

