ADDED : ஜன 23, 2025 12:26 AM

சென்னை:தமிழக விவசாயிகளிடம் இருந்து, 2024 நவ., 1 முதல் இம்மாதம் 31ம் தேதி வரை, 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. கேழ்வரகு விளைச்சல் அதிகம் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், கேழ்வரகு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.
தர்மபுரியில் மட்டும், நவ., 1ல் கேழ்வரகு கொள்முதல் துவங்கியது. கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு, மத்திய அரசின் சார்பில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக, கிலோவுக்கு 42.90 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை, 65 விவசாயி களிடம் இருந்து, 108 டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கேழ்வரகு கொள்முதலுக்கான அவகாசம் இம்மாதத்துடன் முடிவடைகிறது.
இதை நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, கேழ்வரகு கொள்முதல் செய்வதற்கான கால அவகாசம், ஆக., வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

