சவ ஊர்வலத்தில் வெடி விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
சவ ஊர்வலத்தில் வெடி விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
ADDED : ஆக 05, 2025 02:27 AM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் நேற்று இறந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கீழ்குப்பம் வேலுார் பகுதியில் கடந்த 30ம் தேதி நடந்த சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில், மேளம் வாசித்த உளுந்துார்பேட்டை பெரும்பட்டு பகுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் மூர்த்தி, 23; சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த அயன்வேலுார் சத்தியமூர்த்தி, 50; ராமலிங்கம், 45; கீழ்குப்பம் வேலுார் சிங்காரவேல், 45; பிரகாஷ், 36; அயோத்தி மனைவி ஜெயா, 55; ஆகிய 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பிரகாஷ் சிகிச் சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிங்காரவேல், 45; நேற்று இறந்தார். அதையடுத்த, வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.