ADDED : செப் 23, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:
தமி ழகத்தில் வழக்கறிஞர்கள் மீது, போலீசார் பொய் வழக்கு பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. அதேபோல, வழக்கறிஞர் கள் மீதான தாக்குதல், கொலை சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே, தமிழகத்தில் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை, மாநில அரசு உடனே அமல்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகளும், தங்கள் தேர்தல் பிரசாரத்தில், வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் குறித்து மக்கள் மத்தியில் பேச வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.