ADDED : பிப் 04, 2024 05:32 AM
சென்னை: ஆசிரியர்கள் பேட்டி :
டி. செந்தில்குமார், 55 - ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் :
மாணவர்களுக்கு இது மிகப் பெரிய மேடையாக உள்ளது. தொடர் முயற்சி இருந்தால் மட்டுமே இந்த போட்டில் வெற்றி பெற முடியும் என்பதை மாணவர்கள் தெரிந்துக் கொண்டார்கள். பட்டம் மாணவர்களுக்கு தகுந்த படி, சுவையாக பல விஷயங்களை எடுத்துரைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
---------------------------
ஆர். அமுதா, 35 - மேற்கு மாம்பலம் எஸ்.ஆர்.எம்., பள்ளி
பட்டம் ஆசிரியர்களுக்கும் உதவியாக உள்ளது. மாணவர்கள் தெரியாத விஷயங்களை தெரிந்துக் கொள்ள உதவியாக உள்ளது.
------------------------
டி. ஸ்ரீபிரியா, 42 - ஸ்பிரிங்பீல்ட் பள்ளி - கே.கே., நகர்
நாங்க மூன்றாவது ஆண்டாக பங்கேற்றுள்ளோம். முதல் முறை எங்கள் மாணவர்கள் நான்காவது இடத்தை பிடித்தனர். இரண்டாம் ஆண்டு 8 வது இடத்தை பிடித்தனர்.
மாணவர்களின் தமிழ் உச்சரிப்பிற்கு பட்டம் பெரும் உதவியாக உள்ளது. எங்கள் பள்ளியில் நடந்த கண்காட்சியில் பட்டம் இதழ் அரங்கும் அமைத்தோம். செய்தித்தாள் வாசிப்பை மாணவர்களிடம் ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
----------------------------------------
ஜி. சந்திரிகா, 33 - சுதந்திரா மெட்ரிக் பள்ளி - திருத்தணி
பாட புத்தகத்தை தாண்டி ஒரு உலகம் உள்ளதையும், அதை தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பையும் பட்டம் இதழ் மாணவர்களுக்கு அளிக்கிறது. மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்ள பட்டம் உதவியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
---------------------------------------------
மாணவர்கள் பேட்டி :
எம்.யாகினி - ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி
எனக்கு வரலாறு படிப்பதில் அதிக ஆர்வம் இல்லை. பட்டம் படிக்க துவங்கியதில் இருந்து வரலாறும் படிக்க துவங்கியுள்ளேன். முதல் முறையாக இதேபோன்ற போட்டியில் பங்கேற்றுள்ளேன். இதனால், பலவற்றை கற்க முடிந்தது.
------------------------
எஸ். சான்வி - சுதந்திரா மெட்ரிக் பள்ளி - திருத்தணி
நான் எட்டாவது இடத்தை பிடித்துள்ளேன். மேடை ஏறியது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. பட்டத்தில் அறிவியல் சார்ந்த பகுதி எனக்கு மிகவும் பிடிக்கும். வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடம் குறித்து முன்னதாக தெளிவாக பட்டம் வாயிலாக தெரிந்துக் கொள்ளவதால், அந்த பாடவும் மிகவும் எளிமையாகிவிடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
------------------------------------------------
அபிராமி. எஸ் - வெங்கடேஸ்வரா வித்யாலயா - அயப்பாக்கம்
நான் முதல் முறையாக வினாடி வினா போட்டில் பங்கேற்கிறேன். எனக்கு தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகம் வரும். இதனால், மதிப்பெண் குறைந்தது. பட்டம் படிக்க துவங்கியதில் இருந்து தமிழில் எழுத்து பிழை இன்றி எழுத கற்றுக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
----------------------------------
புவனேஷ், ஜி. - வித்யா ரத்னா பி.டி.எஸ்., பள்ள - அடையாறு
அரங்கில் இருந்த மாணவர்களுக்கும் வாய்ப்பளித்து, பரிசுகள் வழங்கியது மிகவும் பிடித்திருந்தது. பள்ளியில் பட்டம் படித்து, அதை சக மாணவர்களுடன் கலந்துரையாடும் போது, அவர்களுக்கு தெரிந்ததையும் கற்றுக் கொள்ள முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
-------------------------------------------
அனிஷ் ராகவ். எஸ் - சியோன் பள்ளி - செம்பாக்கம்
வினாடி வினா போட்டியில் பங்கேற்ற பிறகு தான், அனைவரும் எவ்வளவு துாரம் பயிற்சி எடுத்துள்ளனர் என, தெரியவந்தது. அடுத்த முறை நானும் வெற்றி பெற முயற்சி செய்வேன். பள்ளியில் ஆங்கிலத்தில் கற்றுக் கொள்ளும் பொது அறிவி சம்மந்தமான அனைத்தும் பட்டத்தில் தமிழில் எளிய முறையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-----------------------------------------