செயற்கைக்கோள் தொலைபேசி மீனவர்களுக்கு கிடைப்பதில் தாமதம்
செயற்கைக்கோள் தொலைபேசி மீனவர்களுக்கு கிடைப்பதில் தாமதம்
ADDED : அக் 28, 2025 09:58 PM
சென்னை:மீன்வளத்துறை சார்பில், ஆழ்கடல் மீனவர்களுக்கு மானிய விலையில், செயற்கைக் கோள் தொலைபேசி வழங்க, மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கிய நிலையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், போதிய இருப்பு இல்லாததால், அவற்றை வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களுக்கு, 200 செயற்கைகோள் தொலைபேசி வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
அந்த எண்ணிக்கையை 500 ஆக உயர்த்தி வழங்க, மீன்வளத்துறை தமிழ க அரசுக்கு பரிந்துரை செய்தது. அதை ஏற்று, மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் வழங்கி உள்ளன.
ஆனால், செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கும், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், தங்களிடம் 'ஸ்டாக்' இல்லை எனக் கூறியுள்ளது. இதனால், மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி வழங்குவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம் செயற்கைக் கோள் தொலைபேசி இருப்பு இல்லை. எனவே, உடனடி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொலைபேசி வந்ததும், மீனவர்களுக்கு வழங்கப்படும்' என்றனர்.

