ரூ.49.49 கோடியில் 11 பணிகள் துணை முதல்வர் அடிக்கல்
ரூ.49.49 கோடியில் 11 பணிகள் துணை முதல்வர் அடிக்கல்
ADDED : செப் 20, 2025 03:08 AM

சென்னை:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 49.49 கோடி ரூபாயில், 11 விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி, அடிக்கல் நாட்டினார்
சென் னை, நேரு விளையாட்டரங்கில், 24.70 கோடி ரூபாயில், உயர் செயல்திறன் பயிற்சி மையத்துடன் கூடிய விடுதி; 3.49 கோடி ரூபாயில் கூடைப்பந்து, கைப்பந்து மைதானங்கள்; 2.49 கோடி ரூபாயில் எறிதல் மையம்; 2.74 கோடி ரூபாயில் நீச்சல் குளம் மறுசீரமைப் பு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மதுரையில் 5.60 கோடி ரூபாயில் 100 பேர் தங்கும் விடுதி, திருவள்ளூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், தலா 1.50 கோடி ரூபாயில் பாரா விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன.
இவற்றுக்கு, நேற்று தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார். தமி ழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழக வில் வித்தை வீராங்கனையான வெனிஷா ஸ்ரீக்கு, 4.10 லட்சம் ரூபாய்க்கு, வில் வித்தை விளையாட்டு உபகர ணங்களை வழங்கினார்.