நெரூரில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்; ஐகோர்ட் மதுரை கிளை தடை உத்தரவு
நெரூரில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம்; ஐகோர்ட் மதுரை கிளை தடை உத்தரவு
ADDED : மார் 13, 2025 12:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை தடை விதித்து உத்தரவிட்டது.
கரூரை அடுத்துள்ள நெரூரில் சதாசிவம் பிரம்மேந்திரா் சுவாமி நினைவு தினத்தை முன்னிட்டு பக்தா்கள் எச்சில் இலையில் உருண்டு அங்கப்பிரதட்சிணம் செய்து நோ்த்திக் கடன் செலுத்த ஐகோர்ட் மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி .ஆர். சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தவிட்டு இருந்தார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு தரப்பில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று (மார்ச் 13) ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர்.