ஒரு முறையாவது வேங்கைவயல் சென்றாரா விஜய்: ராமச்சந்திரன்
ஒரு முறையாவது வேங்கைவயல் சென்றாரா விஜய்: ராமச்சந்திரன்
ADDED : டிச 09, 2024 04:52 AM

சாத்துார் : வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அளித்த பேட்டி:
பெஞ்சல் புயல் நிவாரண நிதியை உயர்த்தி தருவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். தற்போது மத்திய அரசு ஆய்வுக்குழுவினர் புயல் சேத மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு குழுவின் அறிக்கை அடிப்படையில் தான், அடுத்து என்ன என்பது தெரியவரும்.
கருணாநிதி முதல்வராக இருந்த காலத்திலும், தற்போது ஸ்டாலின் முதல்வராக உள்ள காலத்திலும் தி.மு.க.,வை மையப்படுத்தி தான் பிற எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
புதிதாக கட்சி துவங்கியுள்ள த.வெ.க., தலைவர் விஜய் வேங்கைவயல் பிரச்னை குறித்து பேசியுள்ளார். அங்கு போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. ஒரு முறையாவது வேங்கை வயலுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியிருப்பாரா விஜய்?
புயல் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டதும், முதல்வர் ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்கள் வழங்கினார். விஜயைப் போல கட்சி அலுவலகத்திற்கு மக்களை அழைத்து வந்து நிவாரணப்பொருட்கள் வழங்கி போட்டோ ஷூட் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.