ADDED : அக் 15, 2024 04:22 AM
வசிப்பது தாழ்வான பகுதி எனில், அரசு முகாம் உட்பட பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும்
அரசு வெளியிடும் முன்னெச்சரிக்கை, அறிவுரையை பின்பற்ற வேண்டும்
மொபைல் போன் சார்ஜ், டார்ச் லைட், எண்ணெய் விளக்கு, தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, தயாராக வைக்கவும்
விலையுயர்ந்த பொருட்கள், ஆவணங்கள், உணவுப்பொருட்களை நீர் புகாத பைகளில் வைத்து பாதுகாக்கவும்
வாகனங்களை பாதுகாப்பான உயரத்தில் நிறுத்தவும்
மருந்து, மாத்திரை அடங்கிய முதலுதவிப்பெட்டி வைத்திருக்க வேண்டும்
வெளியே செல்வதை தவிர்க்கவும். வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் குடை, ரெயின் கோட் மறக்க வேண்டாம். குடும்பத்தினருடன் தொடர்பில் இருங்கள்
தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களை கடக்கும் போது கவனம் வேண்டும்
பால், காய்கறிகள், பிஸ்கட், உலர் பழங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும்
சூறாவளி, புயல் நேரத்தில் மின்சாரம், சமையல் எரிவாயு இணைப்பை துண்டிக்கவும். கதவு, ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும்
பலத்த காற்று, மின்னல், இடியின் போது மரங்களின் கீழ் நிற்க வேண்டாம். மொபைல் போனை, 'பிளைட் மோடில்' வைக்கவும்
அறுந்து விழும் மின் கம்பிகள் மீது மிதித்திடாமல் கவனம் தேவை
வதந்திகளை பரப்பக்கூடாது.

