sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையில் மிகுந்த அக்கறை கட்டும் 'தினமலர்' நாளிதழ்

/

தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையில் மிகுந்த அக்கறை கட்டும் 'தினமலர்' நாளிதழ்

தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையில் மிகுந்த அக்கறை கட்டும் 'தினமலர்' நாளிதழ்

தமிழக மக்களின் அத்தியாவசிய தேவையில் மிகுந்த அக்கறை கட்டும் 'தினமலர்' நாளிதழ்


ADDED : அக் 01, 2025 07:54 AM

Google News

ADDED : அக் 01, 2025 07:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூக மேம்பாடு என்பது, அடித்தட்டு மக்களுக்கு தேவைப்படும் சுகாதாரம், குடிநீர், சாலை, மருத்துவம், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி அடைந்த நிலையை குறிப்பிடுவதாகும். அந்த வகையில் கல்வி, விவசாயம், தொழில், வர்த்தகம் சார்புடைய வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் எளிய பிரிவு மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்க பெறுவதிலும், அவை தொடர்பான பணிகளில் குரல் எழுப்புவதிலும், 'தினமலர்' நாளிதழ் தன் பணியை செவ்வனே செய்து வருகிறது.

தமிழகத்தில் கிராமங்களில் மட்டும் அல்லாது, நகரங்களிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சில சமயங்களில் சுகாதாரமற்ற குடிநீரையும் மக்கள் குடிக்க வேண்டிய நிலை காண முடிகிறது.

பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக எடுத்து செல்லப்படும் குடிநீர் குழாய்களை சுற்றி, அசுத்த கழிவு நீர் தேங்கி, நிற்கும் நிலையை பல ஆண்டுகளாக காண முடிகிறது. குழாய் வழியே செல்லும் குடிநீரில் அசுத்தமான கழிவு நீர் கலக்கும் பட்சத்தில் அதை குடிக்கும் போது, பல மக்களுக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதை, பல்வேறு சமயங்களில் சிறப்பு செய்திகளாக நம் நாளிதழில் வெளியிடப்பட்டு உள்ளன.

மழை காலங்களில் சேதமடைந்த சாலை களால், வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாவதுடன், கடும் சிரமத்திற்கும் ஆளாகின்றனர். மக்களின் அத்தியாவசிய தேவையான சாலை வசதியில் குறைபாடுகள் தொடர்பாக, அவற்றை சுட்டி காட்டும் சிறந்த பணியை நம் நாளிதழ் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, மக்களுக்கு மூச்சு திணறல், சுவாச கோளாறு, தொற்று நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாய சூழல்கள் அவ்வப்போது எழுகின்றன. நீர் மாசுபாடு என்பது ஏதேனும் வெளிப்புற பொருட்களினால் நீர் மாசுபட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லாமல் போய் விடுகிறது.

இவ்வாறு மாசுபடும் குடிநீரை மக்கள் பயன்படுத்தும் போது, பாதிப்பு ஏற்பட்டு, தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் மக்களின் சுகாதாரம், பல காரணங்களால் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

அந்த சமயங்களில், அவை குறித்த தகவலை, நம் நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டு, அரசின் கவனத்திற்கு எடுத்து ெசன்று, மக்கள் நலனுக்காக சிறந்த பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக சமூகத்தின் பொது சுகாதாரத்தில் நம் நாளிதழ் கொண்ட அக்கறையை அறியலாம்.

மின்சாரம்


சென்னை உட்பட மாநிலம் முழுதும் பல இடங்களில் மின் சாதன பழுது காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் மின் தடையால் பலர் வீடுகளில் துாங்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சேதமடைந்த மின் சாதனங்களால், மின் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இந்த பிரச்னைகள் தொடர்பாக நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு, மக்களுக்கு தீர்வு கிடைக்கும் பணிகளை மேற்கொள்கிறது.

மருத்துவம்


மக்களின் அத்தியாவசிய தேவையான நோய் தீர்க்கும் மருத்துவ துறையில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், பல கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

இந்த நுாற்றாண்டின் துவக்கத்தில் தான் குழந்தைகள் கவனிப்பு மருத்துவம், பெரியவர்களுக்கு அமைப்பதை விட மாறுபட்டது என, உணர்ந்து குழந்தை நல மேம்பாட்டிற்கு தனி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஊட்டச்சத்து குறைபாடு தடுத்தல், தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பு, நோய்களுக்கு நல் மருத்துவம் போன்றவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன.

எனினும் திட்டமிட்ட இலக்குகளை அடைய முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லாததுடன், குழந்தை நல மருத்துவ முன்னேற்றங்களை பெற்றோருக்கு விளக்கி, அவர்களை குழந்தைகள் நல பாதுகாப்பில் முழு முனைப்புடன் ஈடுபடுத்த தவறியதாகும்.

இருபதாம் நுாற்றாண்டை கடந்து, 25 ஆண்டுகள் ஆன போதிலும், இந்த குறைபாடு இருப்பது சமூக மேம்பாட்டு பணிகளுக்கு பெரும் இடர்ப்பாடாகவே உள்ளது. மாநிலம் முழுதும் இந்த நிலையை பல்வேறு சமயங்களில் சந்திக்க வேண்டியுள்ளது. பொது மக்களின் மருத்துவ தேவைகளில் ஏறற்படும் இத்தகைய பெரும் குறைபாடுகளை நம் நாளிதழ் பல்வேறு சமயங்களில் செய்திகளாகவும், சிறப்பு செய்திகளாகவும் வெளியிட்டு, அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும், வாரம்தோறும் மருத்துவ பகுதியை வெளியிட்டு வருவதன் வாயிலாக, மக்களின் நலன், சமூக மக்கள் நோய் தடுப்பு, பராமரிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளுக்கு முக்கிய பங்களிப்பை நம் நாளிதழ் செய்து வருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு


ஒரு சமூகத்தில் தொழில் வளர்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு அடையும் காலகட்டங்களில் மாசுபாடு ஏற்படுதலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும் தவிர்க்க இயலாது என்ற நிலையை தமிழகத்தில் பல ஆண்டுகளாக காண முடிகிறது.

தற்போதைய வாழ்வியல் முறையில் தமிழகத்தில் பெருகி வரும் தொழில் வளம் சமூகத்திற்கு ஒரு பக்கம் வளர்ச்சியை அளித்தாலும், அதிகரித்து வரும் தொழிற்சாலை கழிவுகள், நீர்நிலைகளில் கலப்பது, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை போன்றவற்றால், மக்களுக்கு பெரும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதை பல துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, நம் நாளிதழ் பல்வேறு செய்திகளை வெளியிட்டு, மக்கள் நலனை பாதுகாக்க முக்கிய பங்காற்றுகிறது.

நகரமயமாக்கல்


பலரும் வேலைவாய்ப்பு, கல்வி போன்றவற்றுக்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயருகின்றனர். இதனால், சென்னை உட்பட பல நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

நகரங்களில் வசிக்கும் மக்களை விட, அந்நகரங்களுக்கு செல்லும் மக்கள் தொகை அதிக வளர்ச்சியுடன் காணப்படுகிறது.

தமிழகத்தின் பெருநகரம் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் நெருக்கம் காரணமாகவும், நகரங்களை சுற்றியுள்ள புற நகரில் பெருகி வரும் தொழிற்சாலைகள் காரணமாகவும், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் பலவித பிரச்னைகள் ஏற்படுவதை நம் நாளிதழ் சுட்டிக்காட்டி வருகிறது. இதன் வாயிலாக சுற்றுச்சூழல் மாசுபாடு குறைபாடுகள் களையப்பட்டு தீர்வுகளும் காணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கிராமங்களில் மட்டும் அல்லாது, நகரங்களிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சில சமயங்களில் சுகாதாரமற்ற குடிநீரையும் மக்கள் குடிக்க வேண்டிய நிலை காண முடிகிறது.








      Dinamalar
      Follow us