ADDED : டிச 25, 2024 01:04 AM
சென்னை:ஆவினில் இன்று முதல், இரண்டு வகை ஐஸ்கிரீம்கள், சலுகை விலையில் விற்கப்பட உள்ளன.
ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் வெளியிட்ட அறிக்கை:
ஆவின் சார்பில்,75 ஐஸ்கிரீம் வகைகள் தயாரித்து விற்கப்படுகிறது. தமிழகம் முழுதும் மாதந்தோறும் 1.5 கோடி ரூபாய் அளவில், ஐஸ்கிரீம் விற்பனை நடக்கிறது. இதை மேலும் அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எதிர்வரும் பண்டிகைகளை முன்னிட்டு, பொதுமக்கள் விரும்பும் வகையில், மேங்கோ மற்றும் கிரேப் டூயட் ஐஸ்கிரீம் வகைகளில், இரண்டு வாங்கினால், 10 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
இச்சலுகை இன்று முதல், ஜன., 31 வரை நடைமுறையில் இருக்கும். ஐஸ்கிரீம் வகைகளை விற்பதற்கு, தமிழகம் முழுதும் மொத்த விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆர்வம் உள்ளவர்கள், www.aavinmilk.com இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, ஆவின் உதவி பொது மேலாளர் சதீஷ் என்பவரை 90430 99905 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

