ADDED : ஜன 01, 2024 11:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சில்வார்பட்டி : தேனி மாவட்டம் சில்வார்பட்டி விநாயகர் கோவில் நிலவறையில் உள்ள கன்னட கல்வெட்டை வல்லுனர்கள் கண்டறிந்தனர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறியதாவது: இக்கோவில் நிலவறையில், 3 அடி உயரம், 2.5 அடி அகலம், அரை அடி தடிமன் உள்ள பலகைக் கல் உள்ளது. இது, அங்குள்ள சுவருடன் வைத்து பூசப்பட்டுள்ளது. இக்கல்லின் மேற்பகுதியில் சிவலிங்கம், சூரியன், சந்திரன் கோட்டுருவங்களாக வெட்டப்பட்டுள்ளன.
அவற்றின் கீழே நான்கு வரிகளில் கன்னட மொழி எழுத்துக்களால் ஆன கல்வெட்டு உள்ளது. அதில், 'ஸ்ரீஹாலபையா கவுடா கிராம வேல்பரார பட்டா' என உள்ளதாகவும், இக்கல்வெட்டில் உள்ள எழுத்து, 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

