UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 09:17 PM
புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம், உள்விளையாட்டு அரங்கம், தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கி கட்டப்பட்டது. இதை காணொளி காட்சி வாயிலாகவே திறந்திருக்கலாம். ஆனால், 10 கோடி ரூபாய் செலவிட்டு, நிதியை வீணடித்துள்ளனர்.
தி.மு.க., ஆட்சியில் சிறைத்துறை நிர்வகித்த பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக, ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. தற்போது இவை அனைத்தும், தனியார் பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு ஆதரவாக மூடப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க.,வும், திமுகவும், த.வெ.க.,வுக்கு எதிராக, சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்போவதாக த.வெ.க.,வினரே வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். த.வெ.க.,வில் தான் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் ஒன்று சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் ஆதரிப்போம்.
– ரகுபதி
முன்னாள் அமைச்சர், தி.மு.க.,
