ADDED : டிச 06, 2025 09:07 AM

சென்னை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராடி வரும் முருக பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் படத்தை, வீடு மற்றும் கடைகளுக்கு, ஹிந்து அமைப்பினர் வினியோகம் செய்தனர்.
'மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு, முருக பக்தர்களின் போராட்டத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இருப்பதால், பாரத் ஹிந்து முன்னணி அமைப்பினர், சென்னையில் நேற்று வீடு மற்றும் கடைகளில், நீதிபதியின் படத்தை வினியோகம் செய்தனர்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் மாநில செயலர் டில்லிபாபு கூறியதாவது:
முதல் கட்டமாக சென்னையில் இப்பணியை துவங்கி உள்ளோம். இதற்கு முன், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், மாநிலம் முழுதும், 210க்கும் மேற்பட்ட ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டு உள்ளன. நீதிக்கு தலைவணங்கி நாங்கள் அமைதி காத்து வந்தோம்.
தற்போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராகவும், அவரை விமர்சித்தும் வி.சி., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பேசி வரு கின்றனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடு க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

