தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மது அருந்தி மக்களுக்கு இடையூறு: 36 பேர் கைது

மது அருந்தி மக்களுக்கு இடையூறு: 36 பேர் கைது

மது அருந்தி மக்களுக்கு இடையூறு: 36 பேர் கைது


ADDED : நவ 14, 2026 10:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 10:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள், கோவில் வளாகங்கள் மற்றும் சாலையோரங்களில் சட்டவிரோதமாக மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், மாவட்டம் முழுவதும் உள்ள 7 போலீஸ் உட்கோட்டங்களிலும் இன்று (நவ.,14) காலை முதல் இரவு வரை அந்தந்த பகுதி டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் ட்ரோன் கேமரா மூலம் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், பொது இடங்களில் மது அருந்தி ரகளையில் ஈடுபட்டவர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர். இதுதொடர்பாக, மாவட்டம் முழுவதும் மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்து, 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொது இடங்களில் மது அருந்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us