ADDED : செப் 08, 2025 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, செப். 8-
தமிழக துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை, குலக்கல்வி திட்டம் ஆகியவற்றை, தமிழகத்தில் திணிக்க பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பிறை கொடி உள்ள ஒவ்வொரு வீட்டிலும், கருப்பு, சிவப்பு கொடி நிச்சயம் பறக்கும். அதனால்தான் தி.மு.க., என்றைக்கும் சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக இருக்கிறது.
நான் பொது வாழ்க்கைக்கு வந்து, முதன் முதலாக, சிறுபான்மையினருக்கு எதிரான, குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்து எறிந்ததற்காக கைது செய்யப்பட்டேன். அதை நினைக்கையில், பெருமையாக உள்ளது.
இவ்வாறு கூறினார்.