ADDED : அக் 13, 2025 01:18 AM

நெல்லுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையின் பலன்கள் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. தி.மு.க., ஆட்சியில் இடைத்தரகர்களால் அது தடுக்கப்படுகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும்கூட கரும்புகளைப் பெற்றதற்கு, தர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடிக்கின்றனர். நிலுவைத் தொகையை பெற முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
மழையில் இருந்து நெல்லைப் பாதுகாப்பதில் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். டெல்டா பகுதிகளில், நீர்ப்பாசனக் கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. போதுமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படவில்லை.
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஒப்பிடும்போது, ஒரு மூட்டை நெல்லை 40 ரூபாய்க்கு குறைவாகக் கொள்முதல் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். இதற்கெல்லாம் காரணம், தி.மு.க., அரசின் தவறான ஆட்சி நிர்வாகம்தான்.
- சுதாகர் ரெட்டி
தமிழக பா.ஜ., தேசிய இணைப் பொறுப்பாளர்