தமிழக விவசாயிகளை பழி வாங்கும் தி.மு.க., அரசு பழனிசாமி காட்டம்
தமிழக விவசாயிகளை பழி வாங்கும் தி.மு.க., அரசு பழனிசாமி காட்டம்
ADDED : ஆக 12, 2025 04:06 AM
ராயக்கோட்டை:''அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விவசாயிகளை தி.மு.க., அரசு பழிவாங்குகிறது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
'மக்களை காப்போம்; தமிழக த்தை மீட்போம்' என்ற பிரசார சுற்றுப்பயணத்தின் மூன்றாம் கட்டத்தை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பனஹள்ளி, தளி, ஓசூர் சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசா மி நேற்று துவக்கினார்.
'ராயக்கோட்டையில் பேசியபோது, 'பை பை ஸ்டாலின்; மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என மூன்று முறை கூறினார்.
பின்னர், அவர் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில், வேப்பனஹள்ளி தொகுதியில் இந்தோ - இஸ்ரோ சாகுபடி பயிற்சி மையத்தை ஏற்படுத்தினோம். ஓசூரில் பிரமாண்ட சர்வதேச மலர் ஏல மையம், 20 கோடி ரூபாயில் கட்டினோம்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால், விவசாயிகளை பழிவாங்கும் வகையில், தி.மு.க., அரசு அப்படியே பூட்டி வைத்துள்ளது.
மலர் விவசாயிகளுக்கான மானியத்தையும் தி.மு.க., அரசு நிறுத்தி விட்டது. மாம்பழம் விலை வீழ்ச்சியால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். அவர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும்.
மா விவசாயிகளுக்காக அ.தி.மு.க., நடத்திய போராட்டங்களையும், விவசாயிகளின் துயரங்களையும் தி.மு.க., ஆட்சி கண்டுகொள்ளவில்லை.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், விவசாய தொழிலாளர்கள், மலைவாழ் மக்களுக்கு, இப்போது கட்டும் வீடு மாதிரி இல்லாமல், அற்புதமான கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும்.
வீட்டுமனை இல்லாவிட்டால், அதை வாங்கித்தந்து வீடு கட்டி கொடுப்போம். மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், தீபாவளி பண்டிகையின் போது பெண்களுக்கு அற்புதமான இலவச சேலைகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.