வெடி விபத்துக்கு தி.மு.க., அரசின் அலட்சியமே காரணம்
வெடி விபத்துக்கு தி.மு.க., அரசின் அலட்சியமே காரணம்
ADDED : ஆக 11, 2025 04:17 AM
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட வெடி விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்துள்ளனர். ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். கடந்த ஒரு மாதத்தில், அடுத்தடுத்து நடந்த வெடி விபத்தில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதை, முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுத்திருந்தால், வெடி விபத்து ஏற்பட்டிருக்காது. தி.மு.க., ஆட்சி நிர்வாகத்தின் மெத்தனமும், அலட்சியமும், தொடர் வெடி விபத்துக்கு காரணமாக இருக்கிறது.
பட்டாசு தொழிலையும், இதில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் கடமை, தமிழக அரசுக்கு உள்ளது. தற்போதைய பட்டாசு வெடி விபத்து காரணத்தை கண்டறிந்து, அனைத்து பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் வெடி விபத்து நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி.கே.வாசன், த.மா.கா., தலைவர்