தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க., நிறைவேற்றவில்லை முன்னாள் அமைச்சர் உதயகுமார் சாடல்
ADDED : அக் 19, 2024 07:47 PM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
தி.மு.க., குடும்பக் கட்சி என்பதால், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் நீட் தேர்வு ரகசியம், கல்வி கடன் ரத்து, வேலை வாய்ப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை. இதற்கு உதயநிதி உரிய பதில் கூறிவிட்டால், பொதுவாழ்வில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
அ.தி.மு.க.,வில் பிரிவு என்று, ஊடகங்கள் தான் ஊதி பெரிதாக்குகின்றன அ.தி.மு.க., ஒற்றுமையாக, வலிமையாக இருக்கிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று மக்கள் நினைத்து விட்டனர். மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது, புதியவர்கள் பலர் அமைச்சர் பொறுப்புக்கு வருவர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டச்செயலர் குமரகுருவும் அமைச்சராவார்.
மழை வெள்ளத்தில் மக்கள் தவியாய் தவித்துக் கொண்டுள்ளனர். ஆனால், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் வழக்க்ம்போல் 'போட்டோ ஷூட்' நடத்துகின்றனர்.
இதுதான், தி.மு.க., ஆட்சியின் லட்சணம்.
இவ்வாறு உதயகுமார் பேசினார்.