தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க.,வுக்கு அச்சம்: பா.ஜ.,
தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க.,வுக்கு அச்சம்: பா.ஜ.,
ADDED : நவ 21, 2025 11:58 PM
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
தி.மு.க., அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி, ஓட்டுச்சாவடி அலுவலரை கையில் வைத்து, சில பணிகளை செய்துள்ளது.
ஆளுங்கட்சியின் பிடியில் இருந்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களை காப்பாற்ற வேண்டும். நேர்மையான முறையில் வாக்காளர் திருத்த பணி நடக்க வேண்டும். பீஹாரில், நாங்கள் என்ன செய்தோம் என்று சொல்லி ஓட்டு கேட்டோம்.
ஆனால், தி.மு.க., ஐந்து ஆண்டுகள் என்ன செய்திருக்கிறது. இன்னும், 'வட இந்தியா,தென்னிந்தியா, ஆரியர், திராவிடர், பிராமணர், பிராமணர் அல்லாதவர்' என்று தான் சொல்கிறது.
நான்கு ஆண்டுகளாக, எந்த வேலையும் செய்யவில்லை. தேர்தல் வந்ததும், மீண்டும் டில்லி, தமிழகம், வடக்கு, தெற்கு என்று பேசுகின்றனர். இதை, இந்த முறை வாக்காளர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
நாங்கள் என்ன செய்தோம் என்று முதல்வர், துணை முதல்வர் வாயை திறந்து, இதுவரை சொல்லவில்லை. இதிலிருந்தே தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகின்றனர் என்று தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

