''ஊழலின் 'அத்தாரிட்டி' திமுக; மக்களை பிளவுப்படுத்தும் திமுக'' - பிரதமர் மோடி தாக்கு
''ஊழலின் 'அத்தாரிட்டி' திமுக; மக்களை பிளவுப்படுத்தும் திமுக'' - பிரதமர் மோடி தாக்கு
UPDATED : ஏப் 10, 2024 11:55 AM
ADDED : ஏப் 10, 2024 11:54 AM

வேலூர்: ஊழலின் ஒட்டுமொத்த அத்தாரிட்டியாக திமுக.,வும், அதனை வழிநடத்தும் திமுக குடும்பமும் உள்ளதாகவும், மக்கள் ஒற்றுமையாக இருந்தால் திமுக செல்லாகாசாகிவிடும் என்பதால் மக்களை திமுக பிளவுபடுத்துவதாகவும் பிரதமர் மோடி கடுமையான விமர்சித்தார்.
வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், ஆரணி 6 ஆகிய தொகுதிகளின் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ''எனது அருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்'' என தமிழில் பேசி பிரதமர் மோடி தனது உரையை துவக்கினார்.
அவர் பேசியதாவது: வரவுள்ள தமிழ் புத்தாண்டு தினத்திற்கான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் வளம் தரும் ஆண்டாக அமையட்டும். தமிழ் மக்களின் ஆசிர்வாதம் என்றும் எப்போதும் எனக்கு உண்டு; தமிழ் மக்களுக்காக தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணிக்கிறேன்.
தமிழகம்
2014ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை; எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. 21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதத்தை வளர்ச்சி அடைந்த் நாடாக்குவோம்.
இன்றைய உலகத்தில் பலமிக்க நாடாக இந்தியா உள்ளது; அதில் தமிழகத்தின் பங்களிப்பு பெரியதாக உள்ளது. தமிழக இளைஞர்கள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள். இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது.
திமுக
வலிமையான இந்தியாவுக்கான அடித்தளத்தை கடந்த 10 ஆண்டுகால பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு திமுக தடையாக உள்ளது. திமுக ஒரு குடும்ப கம்பெனியாக செயல்பட்டு வருகிறது;
அவர்களின் குடும்ப அரசியலால் தமிழகத்தன் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை திமுக அரசு, ஊழல் செய்து வருகிறது. தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாமல் உள்ளனர். திமுக.,வினர் அனைத்திலும் அரசியல் செய்கின்றனர்.

வளர்ச்சிக்காக ஓட்டு
உலகம் முழுவதும் தமிழின் பெருமை தெரிய வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியை கற்று வருகிறேன். திமுக காங்கிரஸ் ஆட்சியில் தான் கட்சத்தீவை தாரை வார்த்து விட்டார்கள். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்டு வந்திருக்கிறோம். தமிழகம் பெண் சக்தியை ஆதாரிக்கும் பூமி; ஆனால் இண்டியா கூட்டணியினர் பெண்களை அவமதிக்கின்றனர்.
பெண்களை இழிவுப்படுத்துவதில் திமுக.,வும், காங்கிரசும் முன்னணியில் இருக்கின்றனர். ஏப்.,19ல் பா.ஜ., கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கானது. இவ்வாறு அவர் பேசினார்.


