தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்ட தி.மு.க., மேயர்கள்; தடுத்து நிறுத்திய ஸ்டாலின்

பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்ட தி.மு.க., மேயர்கள்; தடுத்து நிறுத்திய ஸ்டாலின்

பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்ட தி.மு.க., மேயர்கள்; தடுத்து நிறுத்திய ஸ்டாலின்


UPDATED : அக் 28, 2026 05:57 PM

ADDED : அக் 28, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2026 05:57 PM ADDED : அக் 28, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால், தி.மு.க., மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள், பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்த நிலையில், அவர்களை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தடுத்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில், அமைச்சர்கள் தலைமையில் நடந்த, மழைக்கால முன்னெச்சரிக்கை பணி ஆய்வு கூட்டங்களுக்கு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்களை, அதிகாரிகள் அழைக்கவில்லை.

மேலும், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாடு நிதி மற்றும் மேயருக்கான சிறப்பு நிதியை விடுவிப்பதிலும், தாமதம் செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றி புகார் எழுப்பினால், ‘மாநகராட்சி நிர்வாகப் பணிகளில், அரசியல் வேறுபாடு பார்க்காமல், ஒத்துழைக்க வேண்டும்’ என, த.வெ.க., அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

திருச்சி உள்ளிட்ட மாநகராட்சிகளிலும், தி.மு.க., கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில், மோதல் நிலவுகிறது. நிலுவையில் உள்ள பணிகளுக்கு, நிதி ஒதுக்குவது தொடர்பாக, த.வெ.க., – தி.மு.க.,வினர் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

இந்த சூழலில், மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், மாநகராட்சி சார்பில், நிவாரணப் பணிகளை சரியாக மேற்கொள்ளாவிட்டால், தி.மு.க., மேயர், கவுன்சிலர்கள் மீது தான் மக்கள் கோபப்படுவர்.

எனவே, சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளின் தி.மு.க., மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள், தங்கள் பதவியை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய, முடிவு செய்தனர். அதற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அனுமதி அளிக்கவில்லை என, தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

‘உள்ளாட்சி பதவிகளை, யாரும் ராஜினாமா செய்ய வேண்டாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பதவி காலம் முடியும் வரை பணியாற்ற வேண்டும். ராஜினாமா முடிவு எடுத்தால், ஆட்சியாளர்களுக்கு தி.மு.க.,வினர் பயந்து ஓடுவது போல் விமர்சனங்கள் உருவாகும்.

‘அது, வரும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்’ என, ஸ்டாலின் கூறியுள்ளார். இதையடுத்து, தி.மு.க.,வினரின் ராஜினாமா முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us