தீபம் ஏற்ற விடாததற்கு தி.மு.க-., விலை கொடுக்கும்
தீபம் ஏற்ற விடாததற்கு தி.மு.க-., விலை கொடுக்கும்
ADDED : டிச 12, 2025 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஒரு சின்ன நெருப்புக் குச்சியை வைத்து தீபம் ஏற்றிவிட்டு போகிற சாதாரண விஷயத்தில், இந்தியா முழுதும் அரசியல் நெருப்பை பற்றவைத்துள்ள தி.மு.க., நாடு முழுதும் தவறான முன்னுதாரணத்தை காண்பித்துள்ளது. அயோத்தி பிரச்னையில்கூட ராமர் கோவில் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
கருணாநிதி மறைந்தபோது, மெரினாவில் சமாதி அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது, அ.தி.மு.க.,அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்; 30 நாட்கள் அவகாசம் தேவை என கேட்டிருந்தால் நிலைமை என்ன? தி.மு.க.,வினர், யாரையோ திருப்திப்படுத்த இதை செய்கின்றனர். இது ஹிந்து, முஸ்லிம் பிரச்னை அல்ல. தீபம் ஏற்றவிடாததற்கு, 2026 தேர்தலில் அரசியல் ரீதியாக பெரும் விலையை தி.மு.க., கொடுக்க வேண்டியது வரும்.
- ராம சீனிவாசன் பொதுச்செயலர், தமிழக பா.ஜ.,

