sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தி.மு.க.,வின் பிரசார பயணம் இன்று துவக்கம்

/

 தி.மு.க.,வின் பிரசார பயணம் இன்று துவக்கம்

 தி.மு.க.,வின் பிரசார பயணம் இன்று துவக்கம்

 தி.மு.க.,வின் பிரசார பயணம் இன்று துவக்கம்


ADDED : பிப் 01, 2026 03:23 AM

Google News

ADDED : பிப் 01, 2026 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க.,வின் 'தமிழ்நாடு தலைகுனியாது' பிரசார பயணம், இன்று துவங்குகிறது.

அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு என்னென்ன நலத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை எடுத்துச் சொல்வதற்காக, 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பிரசார பயணத்தை, தி.மு.க., அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக, தி.மு.க., செய்தித் தொடர்பு செயலர் இளங்கோவன், எம்.பி., கனிமொழி சோமு, எம்.எல்.ஏ., எழிலன் ஆகியோர் அளித்த பேட்டி:

மக்களுடன் இருந்து, மக்களோடு வாழ்ந்து, அவர்களின் வீடுகளிலேயே உணவருந்தி, தி.மு.க., அரசின் திட்டங்களை ஒவ்வொரு தொகுதியிலும் தலா 22 பேச்சாளர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.

மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்த, மத்திய பா.ஜ., அரசு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் மாநில அரசுக்கு, நிதி தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது.

இதுபோன்று மத்திய அரசு தமிழகத்திற்கு இழைக்கும் அநீதிகள், தி.மு.க., அரசின் சாதனைகளை, கட்சியின் முன்னணி பேச்சாளர்கள் 22 பேர், தொகுதிவாரியாக மக்களிடம் எடுத்துச்சொல்ல உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us