ADDED : நவ 16, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை மூடுவோம் என கூறினர். ஆனால், தமிழகம் முழுதும், 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சாராய கடை திறக்கின்றனர். இப்படி திறந்தால், பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?
பொங்கலுக்கு பணம் கொடுத்தால் மக்கள் ஓட்டளித்து விடுவர் என, தி.மு.க., கனவு காண்கிறது. மக்கள் ஏமாந்தவர்கள் இல்லை. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தி.மு.க., எதிர்ப்பதற்கு காரணமே, திருட்டு ஓட்டு போடுவதற்குத்தான். குமாரபாளையம் தொகுதியில் மட்டும் 40,000 போலி வாக்காளர்கள் உள்ளனர்.
- தங்கமணி முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

